செய்திகள்

ஸ்மித், வார்னர் தானாகவே உலகக்கோப்பைக்கு தேர்வாக வாய்ப்பு- மைக் ஹசி

Published On 2018-06-22 10:48 GMT   |   Update On 2018-06-22 10:48 GMT
ஓராண்டு தடைக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால் தானாகவே உலகக்கோப்பைக்கு தேர்வாக வாய்ப்புள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளார். #Smith #Hussey
ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும், துணைக் கேப்டனாகவும் விளங்கியவர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கான போட்டிகளில் விளையாட முடியாத நிலை உள்ளது.

ஆனால், தரம்குறைந்த உள்ளூர் போட்டிகளிலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னணி பேட்ஸ்மேன்களான இவர்கள் இருவரும், பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்டிசெல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் தடுமாறி வருகிறது.

எப்போதும் இல்லாத அளவிற்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அத்துடன் 481 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான உலக சாதனையை தன்வசமாக்கியுள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இடம்பிடிப்பதில் சிக்கல் இருக்காது என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘தற்போது வரை இதுகுறித்து பேசுவது கடினம்தான். ஆனால், தரமான வீரர்கள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்கள் என்பதை நீங்கள் சொல்லனும். அணியின் வளர்ச்சிக்கு அவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வார்கள். அவர்கள் சிறந்த டச் உடன்தான் இருக்கிறார்கள். அதேபோல் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். காயம் குறித்த எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை. எல்லாவற்றிலும் சரியாக இருந்தும், தரமான வீரர்கள் என்பதால் நேராக உள்ளே வருவது குறித்து யோசிக்க வேண்டும்.

நீண்ட காலமாக அவர்கள் இருவரும் சிறந்த வீரர்களாக இருந்துள்ளனர். கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அணிக்க திரும்ப எல்லா வழிகளும் உள்ளது என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News