செய்திகள்

ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் - பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம்

Published On 2018-06-20 10:54 GMT   |   Update On 2018-06-20 10:54 GMT
ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame

புவனேஷ்வர்:

இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற  நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டு என அனைவராலும் அறியப்படும் ஹாக்கி விளையாட்டு, தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.



நீங்கள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே ஹாக்கிக்கு நமது தேசிய விளையாட்டாகும் தகுதி உள்ளது. இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும். மேலும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் நவின் பட்நாயக் கூறியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame
Tags:    

Similar News