செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து- துனிசியாவை 2-1 என வீழ்த்தியது இங்கிலாந்து

Published On 2018-06-18 19:56 GMT   |   Update On 2018-06-18 19:56 GMT
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #TUNENG

மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அடுத்துடுத்து கோல் போட முயற்சித்தனர். முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.



இதையடுத்து துனிசியா வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 35-வது நிமிடத்தில் துனிசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்டம் முசிடில் போட்டி, 1-1 என சமனில் இருந்தது. 



தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் துனிசியா அணியினர் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.



இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் கொலம்பியா - ஜப்பான், போலாந்து - செனகல், ரஷியா - எகிப்து அணிகள் பலப்பரீட்சை சென்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #TUNENG
Tags:    

Similar News