செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து 2018 - 36 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய பெரு அணியை வீழ்த்தியது டென்மார்க்

Published On 2018-06-16 23:24 IST   |   Update On 2018-06-16 23:24:00 IST
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க், பெரு அணிகள் மோதின. பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடம் டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்தார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.



இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக நடைபெற உள்ள இன்றைய நான்காவது ஆட்டத்தில் குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN
Tags:    

Similar News