செய்திகள்

கடைசி டி20 - வங்காளதேசத்துக்கு 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

Published On 2018-06-07 21:44 IST   |   Update On 2018-06-07 21:44:00 IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுவரும் டி20 போட்டியில், வங்காளதேசம் அணியின் வெற்றிக்கு 146 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. #BANvAFG #AFGvBAN

டேராடூன்:

வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. அதன்படி நடந்த முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அக்சார் ஸ்டானிக்சாய் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர்.  தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஷசாத் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார்.



இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. கனி 19 ரன்னிலும், ஸ்டானிக்சாய் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நபி 3 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சமியுல்லா ஷென்வாரி, நஜிபுல்லா சத்ரான் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சத்ரான் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜயத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காளதேசம் அணிக்கு 146 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. #BANvAFG #AFGvBAN
Tags:    

Similar News