செய்திகள்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் - விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்துக்கு முன்னேற்றம்

Published On 2018-06-07 13:45 GMT   |   Update On 2018-06-07 13:45 GMT
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். #ViswanathanAnand #NorwayChessChampionship

ஆஸ்லோ:

நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்திய வீரர்  விஸ்வநாதன் ஆனந்த் தனது ஏழாவது போட்டியில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்த், 1 புள்ளி பெற்றார். 

இதன் மூலம் இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்), நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்), அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
Tags:    

Similar News