ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் போட்டி - கொல்கத்தா அணி வெற்றி பெற 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்

Published On 2018-05-19 21:57 IST   |   Update On 2018-05-19 21:57:00 IST
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 173 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #SRHvKKR
ஐதராபாத்:

ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமியும் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.

கோஸ்வாமி 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் அரை சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.



அப்போது அணியின் எண்ணிக்கை 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஜவோன் சியர்லஸ், ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 173 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
Tags:    

Similar News