செய்திகள்

ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் ரகானேவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்

Published On 2018-05-14 09:39 GMT   |   Update On 2018-05-14 09:39 GMT
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக ரகானேவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #RR
ஐபிஎல் தொடரின் 47-வது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மிக்க சந்தோசத்துடன் பந்து வீச்சு தேர்வு செய்தது. சிறப்பான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணியை 168 ரன்னில் சுருட்டது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று தெரிய வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டன் ரகானேவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் மெதுவாக பந்து வீசியதற்காக தண்டனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #MIvRR #rahane
Tags:    

Similar News