செய்திகள்

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் நாளை தொடக்கம்

Published On 2018-03-21 07:19 GMT   |   Update On 2018-03-21 07:57 GMT
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடக்குகிறது.#NZvENG
ஆக்லாந்து:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது.

நியூசிலாந்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதே நேரத்தில் அந்த அணி ஏற்கனவே பகல்-இரவு டெஸ்டில் ஆடி இருக்கிறது. அறிமுக பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் (அடிலெய்ட், 2015) 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

நியூசிலாந்து விளையாடும் 2-வது பகல்-இரவு டெஸ்ட் ஆகும். இங்கிலாந்து அணி விளையாடும் 3-வது பகல்-இரவு போட்டியாகும். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியாவுடன் விளையாடி இருக்கிறது.

இதில் வெஸ்ட்இண்டீசை இன்னிங்ஸ் மற்றும் 209 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. ஆஸ்திரேலியாவிடம் 120 ரன்னில் தோற்றது

முன்னணி நாடுகளில் இந்தியா மட்டும் தான் டெஸ்டில் விளையாடவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணி அக்டோபர்- நவம்பர் மாதம் இந்தியா வரும்போது பகல்-இரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத் அல்லது ராஜ்கோட்டில் இதை நடித்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 8 பகல்-இரவு டெஸ்ட்டுகள் நடந்து உள்ளன. இதில் ஆஸ்திரேலியா 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

பகல்-இரவு டெஸ்டில் இளம் சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
Tags:    

Similar News