வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு ஷேக் ஹசீனா இரங்கல்
- வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
- மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கலிதா ஜியாவுக்கு அரசியல் எதிரியாக திகழ்ந்தரும், வங்கதேசத்தில் இருந்து தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா இரங்கல் செய்து வெளியிட்டுள்ளார்.
அவாமி லீக் கட்சி எக்ஸ் பக்கத்தில் ஷேக் ஹசீனா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் ஆற்றிய பங்கிற்காகவும், அவர் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை மற்றும் அவை நினைவுகூரப்படும்.
ஜியாவின் மரணம், வங்கதேசத்தின் அரசியல் வாழ்விற்கும், பி.என்.பி. கட்சியின் தலைமைக்கும் ஒரு பெரும் இழப்பு.
இவ்வாறு ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா, மூன்று முறை பிரதமாக இருந்துள்ளார். பிஎன்பி கட்சியின் நீண்ட கால தலைவராகும் இருந்துள்ளார். 80 வயதான ஜியா இன்று காலமானார்.