புதுச்சேரி

இன்று முதல் அமலுக்கு வந்தது - புதுச்சேரியில் மது விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி

Published On 2025-06-21 13:45 IST   |   Update On 2025-06-21 13:46:00 IST
  • விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
  • அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை அரசின் வருவாயை பெருக்க கலால்வரி, நில வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது.

கலால்வரி உயர்வால் புதுவையில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏற்கனவே கொள்முதல் செய்த மதுபானங்களுக்கு பொருந்தாது, அவற்றை பழைய விலைக்கே விற்க கலால்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால் விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலை கொண்ட ரூ.60 விலை கொண்ட குவார்ட்டர் மது ரூ.72 முதல் ரூ.74 வரை விற்கப்படுகிறது. அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.

இதுபோல அனைத்து மதுபானங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மது பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மதுபான விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த காலத்தைபோல தொடர்ந்து விற்பனை நடக்குமா? விலை உயர்வால் மது விற்பனை சரிவை சந்திக்குமா? என மது விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News