இந்தியா

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்து வாக்குவாதம் செய்த யூடியூபர் கைது!

Published On 2025-03-31 18:08 IST   |   Update On 2025-03-31 18:08:00 IST
  • கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
  • அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கேரளாவில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை மறித்து நின்ற யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி இரவு 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில் பிரியங்கா காந்தியின் வாகனத்துக்கு முன் சென்ற பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அதனை மறித்து கேரள யூடியூபரான அனீஷ் ஆபிரஹாம் தனது காரை நிறுத்தியுள்ளார்.

அவரைக் காவல்துறையினர் அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனத்தை மறித்தது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்படி வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அனீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

மேலும் அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அவர் ஜாமீனில் வெளியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Tags:    

Similar News