தொடர் பாலியல் தொல்லை கொடுத்தவரை வீடு புகுந்து வெட்டிக் கொன்று எரித்த பெண்கள் - 10 பேர் கைது!
- அந்த நபர் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கிராமப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது ஆறு பேர், தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.
ஒடிசாவில், நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது நபரை, பெண்கள் குழு ஒன்று கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 3 ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரை அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்து, பின்னர் உடலை எரித்துள்ளனர்.
அந்த நபர் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கிராமப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது ஆறு பேர், தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.
இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களுக்கு முடிவுகட்டவே இந்த கொடூர முடிவை எடுத்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டெடுத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு முன் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.