இந்தியா

4 பானிபூரி தான் கொடுத்தாங்க, 6 கொடுக்கல... நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

Published On 2025-09-20 17:14 IST   |   Update On 2025-09-20 17:14:00 IST
  • ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் கூறியுள்ளார்.
  • கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

குஜராத் மாநிலம் சுர்சாகர் லேக் பகுதியில் சாலையோர பானிபூரி கடை ஒன்றில் பெண் ஒருவர் பானிபூரி சாப்பிட்டுள்ளார்.

அப்போது ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் 4 பானிபூரி மட்டுமே கொடுத்ததால் அப்பெண் அதிருப்தி அடைந்துள்ளார்.

பானிபூரி கொடுக்காததால் கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அப்பெண்ணை அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News