தற்கொலை செய்ய தண்டவாளத்தில் குதித்த பெண் ரெயிலுக்கு அடியில் சிக்கிய விபரீதம் - வீடியோ
- ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
- அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.
பீகாரில் தற்கொலை செய்ய தண்டவாளத்தில் குதித்த நடுத்தர வயது பெண் ரெயில் ஓட்டுனரின் சமயோஜித நடவடிக்கையால் உயிர்பிழைத்தார்.
பீகாரில் பெகுசராய் பகுதியில் நேற்று முன் தினம் காலை சலோனா ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சஹர்சாவிலிருந்து சமஸ்திபூருக்குச் செல்லும் பயணிகள் ரெயில், நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்தப் பெண் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
இறுதியில் அப்பெண் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். ஓட்டுநரும் உள்ளுர்வாசிகளும் உடனே விரைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.
குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர்வாசிகள் அந்தப் பெண்ணை என்ஜினுக்கு அடியில் இருந்து மீட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.