இந்தியா

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவனை காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!

Published On 2025-08-08 16:49 IST   |   Update On 2025-08-08 16:49:00 IST
  • மைத்துனரின் திருமணத்திற்கு பைக்கில் மனைவி மைஃப்ரீன் உடன் சென்று கொண்டிருந்தனர்.
  • மேலும் மூன்று பேருடன் சேர்த்து இந்த கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டித்த கணவரை தனது காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துள்ளார்.

நேற்று காலை, ஷாநவாஸ் (28) ஷாம்லி மாவட்டத்தில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு பைக்கில் மனைவி மைஃப்ரீன் உடன் சென்று கொண்டிருந்தபோது, 4 இளைஞர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவர்கள் ஷாநவாஸை கட்டைகளால் அடித்து, கத்தியால் பலமுறை குத்தினர்.

பின்னர் குற்றம் அவர்களின் ஒருவன் ஷாநவாஸை துப்பாக்கியால் சுட்டான். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயமடைந்த ஷாநவாஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஷாநவாஸ் திருமணத்துக்கு மொய் எழுத எடுத்துச் சென்ற ரூ.1.5 லட்சம் ரூபாய் மற்றும் அவரது பைக் காணாமல் போனதால், இது ஒரு கொள்ளை கொலை என்று போலீசார் சந்தேகித்தனர்.

இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பைக்கை போலீசார் கண்டுபிடித்து, அது ஒரு கொள்ளை அல்ல என்று முடிவு செய்தனர்.

போலீஸ் விசாரணையில் ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன், தசாவர் (Tasawer) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் இருவரும் திட்டம் தீட்டி இந்தக் கொலையைச் செய்ததும் தெரியவந்தது.

தசாவர் ஷாநவாஸின் நெருங்கிய உறவினர். தனது மனைவி தசாவருடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு வைத்திருப்பதை ஷாநவாஸ் அறிந்திருந்தார். இதை அவர் கடுமையாக எதிர்த்ததால், அவரைக் கொல்ல அவர்கள் திட்டம் தீட்டினர். மேலும் மூன்று பேருடன் சேர்த்து இந்த கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தசாவர் மற்றும் மற்றொரு குற்றவாளியை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன் மற்றும் மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.   

Tags:    

Similar News