இந்தியா

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - ராஜ்நாத் சிங்

Published On 2025-05-04 20:57 IST   |   Update On 2025-05-04 20:57:00 IST
  • நமது துணிச்சலான வீரர்கள் போர்க்களத்தில் போராடுகிறார்கள்
  • நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு.

பாதுகாப்பு அமைச்சராக, இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லபட்டதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற, சம்ஸ்க்ருதி ஜாக்ரன் மஹோத்சவத்தில் பேசிய ராஜ்நாத் சிங், "ஒரு தேசமாக, நமது துணிச்சலான வீரர்கள் இந்தியாவை உடல் ரீதியாகப் பாதுகாக்கிறார்கள், அதே நேரத்தில் நமது முனிவர்களும் ஞானிகளும் இந்தியாவை ஆன்மீக ரீதியாகப் பாதுகாக்கிறார்கள் ஒருபுறம், நமது துணிச்சலான வீரர்கள் போர்க்களத்தில் போராடுகிறார்கள், அதே நேரத்தில் நமது முனிவர்கள் வாழ்க்கை என்ற களத்தில் போராடுகிறார்கள்.

பாதுகாப்பு அமைச்சராக, நாட்டின் எல்லைகளையும், நமது வீரர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு.

பிரதமர் நரேந்திர மோடியின் பணி செய்யும் பாணி மற்றும் வலுவான உறுதிப்பாடு அனைவருக்கும் தெரியும். மக்கள் எதை விரும்பினாலும், அது மோடியின் தலைமையின் கீழ் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ராஜ்நாத் சிங் உடன் பாபா ராமதேவ் உள்ளிட்டோரும் மேடையை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News