இந்தியா

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

Published On 2025-04-06 00:23 IST   |   Update On 2025-04-06 00:23:00 IST
  • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின

புதுடெல்லி:

வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288

வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.

இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதற்கிடையே, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது.

இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து,

இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.

Tags:    

Similar News