இந்தியா
குழந்தையின் முதல் பிறந்தநாளை நடுவானில் கேக் வெட்டி கொண்டாடிய விமான குழுவினர்- தந்தையின் டுவிட்டர் பதிவு வைரல்
- விமான குழுவினர் நடுவானில் குழந்தைக்கு கேக் வெட்டி கொண்டாடி அந்த குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
- கொண்டாட்ட படங்களை ஆரோகியின் தந்தை ரோகித் டுவிட்டரில் பகிர்ந்து விஸ்தாரா விமான குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சியை தரும் அதிலும் குழந்தைகளின் முதல் பிறந்தநாளை அவர்களது பெற்றோர்கள் விசேஷமாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளை செய்வார்கள்.
இந்நிலையில் ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளை விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. விஸ்தாரா விமானத்தில் மாலத்தீவுக்கு ரோகித் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார். அவரது மகள் ஆரோகிக்கு அன்றுதான் முதல் பிறந்த நாளாகும்.
இதையறிந்த விமான குழுவினர் நடுவானில் அந்த குழந்தைக்கு கேக் வெட்டி கொண்டாடி அந்த குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த கொண்டாட்ட படங்களை ஆரோகியின் தந்தை ரோகித் டுவிட்டரில் பகிர்ந்து விஸ்தாரா விமான குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.