இந்தியா

VIDEO: பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணின் விரல்களை துண்டித்து தங்க நகையை கொள்ளையடித்த திருடர்கள்

Published On 2025-10-18 18:21 IST   |   Update On 2025-10-18 18:21:00 IST
  • ரவீன் மற்றும் யோகானந்தா என்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
  • மொத்தம் சுமார் 55 கிராம் தங்க நகைகளுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டு, அரிவாளால் அவரது இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்தக் சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

காவல்துறை தகவல்படி, உஷா மற்றும் வரலட்சுமி என்ற இரண்டு பெண்கள் செப்டம்பர் 13 அன்று விநாயகர் சதுர்த்தி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பிரவீன் மற்றும் யோகானந்தா என்ற இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளைப் பறிக்க முயன்றனர்.

பயந்துபோன உஷா தனது சங்கிலியைக் கொடுத்த நிலையில், வரலட்சுமி எதிர்த்தபோது, யோகானந்தா அரிவாளால் அவரைத் தாக்கி அவரது கையின் இரண்டு விரல்களைத் துண்டித்தார்.

மொத்தம் சுமார் 55 கிராம் தங்க நகைகளுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

போலீசார் அவரை பல வாரங்களாக தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 74 கிராம் திருட்டு தங்க நகைகள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

  இவர்களுக்கு ஏற்கனவே கொலை வழக்கு உட்பட சில குற்றப் பின்னணிகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News