இந்தியா

VIDEO: பொருட்களை திரும்ப வாங்க மறுத்ததற்காக கடைக்காரரை பிளேடால் தாக்கிய சிறுமி

Published On 2025-05-05 08:27 IST   |   Update On 2025-05-05 08:27:00 IST
  • 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார்.
  • பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் கடைக்காரர் ஒருவரை 15 வயது சிறுமி பிளேடால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார். அப்போது கடைக்காரர் அருகில் இருந்த பெண் உடனடியாக தலையிட்டு சிறுமியைதடுக்க முயற்சித்தார்.

இதுதொடர்பாக பேசிய கடைக்காரரின் சகோதரர் தேவ் சைனி, "அந்தப் சிறுமி அடிக்கடி எங்கள் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் திருப்பி தருவாள். இந்த முறை நாங்கள் ஏற்கனவே அவளிடம் விற்ற பொருட்களை திருப்பித் தரவோ மாற்றவோ மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால் அவள் மீண்டும் பொருட்களை திருப்பி வாங்கி கொள்ளுமாறு எங்கள் கடைக்கு வந்தாள். எங்களை பிளேடால் தாங்குவேன் என்று மிரட்டினாள்.

கடைசியாக நாங்கள் பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவளுடைய பணத்தைத் திருப்பி கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு, திடீரென்று அங்கே நின்று கொண்டிருந்த என் சகோதரனைத் தாக்கினாள். உடனடியாக அந்த சிறுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்" என்று தெரிவித்தார்.

பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News