இந்தியா

VIDEO: உ.பி ரெயில் நிலையத்தில் CRPF வீரரை ஏறி மிதித்து சரமாரியாக தாக்கிய காவி தரித்த பக்தர்கள்

Published On 2025-07-19 21:55 IST   |   Update On 2025-07-19 21:55:00 IST
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் தாக்கப்பட்டார்.
  • காவி உடை அணிந்த பக்தர்கள் இழுத்துச் சென்று அடிப்பது அதில் பதிவாகி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் டிக்கெட் தொடர்பான தகராறில் கன்வார் யாத்ரீகர்களால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மிர்சாபூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ரெயில் ஏற காத்திருந்த சீருடையணிந்த அந்த வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவி உடை அணிந்த பக்தர்கள் இழுத்துச் சென்று அடிப்பது அதில் பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக விசாரணைக்குப் பிறகு, ஏழு யாத்ரீகர்கள் கைது செய்யப்பட்டனர்.  

Tags:    

Similar News