VIDEO: பீகாரில் இளைஞர்கள் புடைசூழ ராகுல் காந்தி தலைமையில் வெள்ளை T-SHIRT பேரணி!
- பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
- ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகாரில் இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பெகுசராய் நகரில் 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்' என்ற கருப்பொருளில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக இன்று டெல்லியில் இருந்து வருகை தந்த ராகுல் காந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடை சூழ பேரணியில் நடந்து சென்றார். இதைத்தொடர்ந்து பாட்னாவில் நடக்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
முன்னதாக பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து பேசிய ராகுல் காந்தி, பீகாரின் இளம் நண்பர்களே, ஏப்ரல் 7 ஆம் தேதி நான் பெகுசராய்க்கு வருகிறேன். ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகார் இளைஞர்களின் உணர்வு, அவர்களின் போராட்டம், அவர்களின் துன்பம் ஆகியவற்றை உலகம் முழுவதும் காண வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.
நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள். சட்டமன்றத் தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்டிருந்தார்.