கிரிக்கெட் (Cricket)
null

VIDEO: சிக்ஸர் அடித்ததும் மாரடைப்பால் சரிந்து விழுந்து பலியான நபர்.. கிரிக்கெட் விளையாடும்போது விபரீதம்

Published On 2025-06-29 21:57 IST   |   Update On 2025-06-30 10:46:00 IST
  • ஹர்ஜித் சிங் என்ற பேட்ஸ்மேன், சிக்ஸர் அடித்தார்.
  • சக வீரர்கள் CPR அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹர்ஜித் சிங் என்ற பேட்ஸ்மேன், சிக்ஸர் அடித்தசில நொடிகளிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக வீரர்கள் CPR அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. 

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சியின் போது இளைஞர்களிடையே  திடீர் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News