இந்தியா

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத் துணைத் தலைவர் டிஸ்சார்ஜ்

Published On 2025-03-12 17:18 IST   |   Update On 2025-03-13 12:18:00 IST
  • கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

73 வயதான ஜகதீப் தன்கர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 நாள் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் கொண்டுள்ளதால் இன்று (மார்ச் 12) மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு துணைத் தலைவரின் உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வந்தோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்த பிறகு, எய்ம்ஸ் மருத்துவக் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News