இந்தியா

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Published On 2023-07-03 02:23 GMT   |   Update On 2023-07-03 02:23 GMT
  • ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கு விசாரணை மே 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி :

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மனுவுக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம் என கூறியது.

இந்த வழக்கு விசாரணை கடந்த மே 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News