இந்தியா

26/11 தாக்குதலுக்கு பதிலடியாக போரை தொடங்க வேண்டாம் என்றது அமெரிக்கா எனக் கூறிய ப. சிதம்பரம்: பாஜக பதிலடி

Published On 2025-09-30 12:22 IST   |   Update On 2025-09-30 12:22:00 IST
  • ஒட்டுமொத்த உலக நாடுகளும் போரை வேண்டாம் என இறங்கி வந்தன.
  • போரை தொடங்க வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. மே மாதம் 7ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் நாடடிற்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள், அங்குள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல்களை இந்தியா திறம்பட எதிர்த்தது பதிலடி கொடுத்து வந்தது. இந்த சண்டை மே 10ஆம் தேதி வரை நீடித்தது. பின்னர் இருநாட்டு ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தை முடிவில் சண்டை முடிவுக்கு வந்தது.

ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே இந்திய எதிர்க்கட்சிகள் 3ஆவது நாடு தலையீட்டை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் டி.வி. விவாதத்தின்போது இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ப. சிதம்பரம் 26/11 தாக்குதலின்போது போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா சொன்னதாக தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

டி.வி. விவாதத்தின்போது "அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் காண்டலீசா ரைஸ் என்னிடமும், பிரதமரிடமும் (அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்) போரை தொடங்க வேண்டாம். ஆயுதம் மூலம் (போர்) பதிலடி கொடுப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் எனத் தெரிவித்தார். ஆனால், நான் இது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் எனக் கூறினேன். ஆனால், எனது மனதில் பதிலடி கொடுக்க வேண்டும் சிந்தனை ஓடியது. மொத்த உலகமும் இந்திய அரசிடம், போரை தொடங்க வெண்டும் எனத் தெரிவிக்க முன் வந்தது" என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நுகர்வோர் விவகாரத்தறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி "வெளிநாட்டு அதிகாரத்தில் 26/11 தாக்குதலின்போது அரசு தவறான கையாண்டது தொடர்பாக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தெரிந்ததை, 17 வருடங்களுக்குப் பிறகு சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News