இந்தியா

உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2023-09-13 23:22 GMT   |   Update On 2023-09-13 23:22 GMT
  • ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்குவது உஜ்வாலா திட்டம்.
  • இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டுகளில், கூடுதலாக 75 லட்சம் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடியை விடுவிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்துடன் சேர்த்து, உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும் என தெரிவித்தார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News