இந்தியா

EVMs-ல் பாஜக டேக்: திரிணாமுல் குற்றச்சாட்டும், தேர்தல் ஆணையத்தின் பதிலும்...

Published On 2024-05-25 07:41 GMT   |   Update On 2024-05-25 07:41 GMT
  • பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது- திரிணாமுல் காங்கிரஸ்
  • வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலின் 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா உள்ளிட்ட 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது. பங்குராவில் தொகுதியில் உள்ள ரகுநாத்பூரில் ஐந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக எழுதப்பட்ட டேக் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் "பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது என்பதை தொடர்ந்து மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். இன்று ஐந்து வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளத.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் "வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பூத் ஏஜென்ட்கள் கையெழுத்திட்ட பொதுவான டேக் தொங்கவிடப்படும். வாக்கு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும்போது ஆய்வு மேற்கொண்டு ஏற்பாடு செய்யும்போது ஹாலில் பா.ஜனதா வேட்பாளருடைய பிரதிநிதிகள்தான அங்கு இருந்தார்கள். இதனால் அவர்களுடைய கையெழுத்து மட்டும் வாங்கப்பட்டது.

எனினும், 56,58,60,61,62 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படும்போது அனைத்து ஏஜென்ட்களும் இருந்தனர். அவர்களுடைய கையெழுத்துகள் பெறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளின் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News