இந்தியா

மேற்கு வங்க அரசு குறித்து பிரதமர் மோடி விமர்சனம்: பதிலடியாக திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்த 5 கேள்விகள்..!

Published On 2025-05-29 18:53 IST   |   Update On 2025-05-29 18:53:00 IST
  • உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.
  • வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது "இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி ஐந்து சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் உண்மை குறித்து பேசுவோம்.

பெண்களுடைய பாதுகாப்பு?

உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.

இளைஞர்கள் நம்பிக்கையின்மை?

வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.

ஊழல்?

உங்கயுடைய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமினில் உள்ளனர். நீதி மெல்ல மெல்லி செத்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் கால்ப்புணர்ச்சியால் உங்களுடைய அரசாங்கம் மேற்கு வங்க அரசுக்கு 100 நாள் வேலைக்கான ஊதியம், அவாஸ் யோஜனா நிதிகளை தர மறுக்கிறது.

கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குழப்பத்தை முதலில் சரி செய்யுங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளது.

Tags:    

Similar News