இந்தியா

ரூ.4.50 லட்சத்துக்கு விற்பனையான துலியா எருமை- தினமும் 25 லிட்டர் பால் தரும்

Published On 2025-01-25 10:44 IST   |   Update On 2025-01-25 10:44:00 IST
  • பல மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
  • நர்சிங்கி சந்தை வரலாற்றில் சாதனை விற்பனையாக அரசு கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், நர்சிங்கியில் வேளாண் சங்கராந்தி கால்நடை திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் நர்சிங்கியை சேர்ந்த ரித்து முக்தார் என்பவர் துலியா வகை எருமையை கொண்டு வந்தார். அதனை நல்கொண்டாவை சேர்ந்த வெங்கட் ரெட்டி என்பவர் ரூ.4.50 லட்சத்திற்கு வாங்கினார். இந்த துலியா எருமை தினமும் 25 லிட்டர் பால் தரும் என தெரிவித்தனர்.

இது நர்சிங்கி சந்தை வரலாற்றில் சாதனை விற்பனையாக அரசு கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் 4 துலியா எருமைகள் தலா ரூ. 2 லட்சத்திற்கு விற்பனையானது. குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜாப்ரா வாதி எருமைகள் தலா ரூ.2 லட்சத்திற்கும், ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 10 குஜரன் வாலா எருமைகள் தலா ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

Tags:    

Similar News