இந்தியா

காரை தாக்கிய பைக் ஓட்டுநர்.. குழந்தையுடன் கதறிய தம்பதி.. வைரல் வீடியோ

Published On 2024-08-21 10:45 IST   |   Update On 2024-08-21 10:45:00 IST
  • கார் ஒன்று இண்டிகேட்டர் போடாமல் இடப்புறம் திரும்பியதாக கூறப்படுகிறது.
  • கார் ஓட்டுநர் காரை விட்டு இறங்காததால் ஆத்திரமடைந்த பைக் ஓட்டுநர் கார் கண்ணாடியை உடைத்தார்.

பெங்களூரு நகரின் தொட்டஹல்லி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இண்டிகேட்டர் போடாமல் இடப்புறம் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்குள்ளாகி, ஆத்திரத்தில் கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கார் ஓட்டுநர் காரை விட்டு இறங்காததால் ஆத்திரமடைந்த அந்த இருசக்கர வாகன ஓட்டி கார் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த தம்பதியரிடம் ரகளை செய்தார். இது குறித்து கார் ஓட்டுனர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, பெங்களூரு போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன ஓட்டியை கண்டுபிடித்த கைது செய்துள்ளனர்.

இருசக்கர வாகன ஓட்டி ரகளை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Tags:    

Similar News