இந்தியா

இஸ்ரேல் பெண் கழுத்து அறுத்துக்கொலை: தற்கொலைக்கு முயன்ற யோகா ஆசிரியர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-12-01 07:23 GMT   |   Update On 2023-12-01 07:27 GMT
  • தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர்.
  • யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன், யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (வயது 36) என்பவர் வந்திருந்தார்.

இவர், கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கி யோகா பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஸ்வத்வா, வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதே வீட்டில் யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர். கிருஷ்ண சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்து விட்டு, கிருஷ்ணசந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யோகா ஆசிரியரான கிருஷ்ணசந்திரன், உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்ததாகவும் அங்கிருந்து வரும்போதே, ஸ்வத்வாவை கேரளாவுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News