இந்தியா

சம்பவ இடத்திற்கு விரைகிறார் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்

Published On 2025-06-12 14:54 IST   |   Update On 2025-06-12 14:58:00 IST
  • விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
  • 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்த 242 பேரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் போலீஸ் துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்தைப் பார்வையிட மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

விபத்து தொடர்பாக நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன். மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமானத்தில் இருந்த அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News