இந்தியா

சத்தீஸ்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுரங்க விரிவாக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.. மக்கள் எதிர்ப்பு

Published On 2026-01-09 08:52 IST   |   Update On 2026-01-09 08:53:00 IST
  • இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
  • மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தின் பைலாடிலா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், அரசுக்குச் சொந்தமான NMDC நிறுவனம் இரும்புத் தாது சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 874.924 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் இரும்புத் தாது தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரும்புத் தாது உற்பத்தியை ஆண்டுக்கு 11.30 மில்லியன் டன்னில் இருந்து 14.50 மில்லியன் டன்னாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.

இந்த விரிவாக்க நடவடிக்கையால் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தார்வாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காடுகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் வழங்கும் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது முரணாக பார்க்கப்படுகிறது.  

Tags:    

Similar News