இந்தியா

ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு தூக்கு: தீர்ப்பை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்

Published On 2025-04-08 15:40 IST   |   Update On 2025-04-08 15:40:00 IST
  • ஐதராபாத்தில் தில்சுக் நகரில் கடந்த 2013, பிப்ரவரியில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது.
  • இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லபட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஐதராபாத்:

தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோனார்க் மற்றும் வெங்கடதிரி தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு தேசிய புலானாய்வு கோர்ட்டில் நடைபெற்றது இந்த வழக்கில் யாஷின் பதக்கல் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்திய முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாஷின் பதக்கல் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேந்ர்த ஷியா உர் ரஹ்மான் மற்றும் 3 பேருக்கு மரணதண்டனை வழங்கி சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யாஷின் பத்கல் உள்பட 5 பேரும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு அங்கு நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கே.லட்சுமணன், நீதிபதி பி.ஸ்ரீசுதா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டது.

Tags:    

Similar News