இந்தியா

தேர்தல் பிரசாரத்தில் கத்தியால் வெட்டுகின்றனர்- பவன் கல்யாண் குற்றச்சாட்டு

Published On 2024-04-02 15:30 IST   |   Update On 2024-04-02 15:30:00 IST
  • நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

திருப்பதி:

ஆந்திராவில் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்.

நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கடந்த 3 நாட்களாக வாராஹி வாகனம் மூலம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.

தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தொகுதி முழுவதும் உள்ள 2 லட்சம் பேர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் என்னால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடியவில்லை. தினமும் 200 பேருடன் மட்டுமே போட்டோ எடுக்க முடிகிறது.

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

நான் பிரசாரத்தில் ஈடுபடும் போது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், ஆர்வலர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆளும் கட்சியினர் அனுப்பிய கூலிப்படையினர் கூட்டத்துடன் கூட்டமாக கலந்து சிறிய கத்தியால் என்னையும், எனது பாதுகாவலர்களையும் வெட்டினர். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காக்கிநாடாவில் வாராஹி யாத்திரை சென்ற போது என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்த போதும், தேர்தலில் பீமாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போதும் நான் துவண்டு விடவில்லை.

இந்த முறை வெற்றியை கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அவர்தான் பித்தாபுரம் தொகுதிக்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News