இந்தியா

மும்பையில் மழையில் நனைந்தபடி ஆடிய முதிய தம்பதியின் வீடியோ

Published On 2023-07-03 13:22 IST   |   Update On 2023-07-03 13:22:00 IST
  • மும்பையில் பெய்த மழைக்கு மத்தியில் வயதான தம்பதியினர் நனைந்தபடி செல்கின்றனர்.
  • பின்னணியில் அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிட் ஆகி இருந்த மன்சில் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரிம் ஜிம் கிரே’ என்ற பாடல் ஒளிபரப்பாகிறது.

மழையில் நனைவது என்பது சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரில் குழந்தைகளும், சிறுவர்களும் விளையாடுவது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் வயதான ஒரு தம்பதி மழையில் நனைந்தப்படி ஆடும் காட்சிகள் பார்ப்பவர்களை மகிழ்ச்சியடைய செய்கின்றது.

இந்த வீடியோ மும்பையில் பெய்த மழைக்கு மத்தியில் வயதான தம்பதியினர் நனைந்தபடி செல்கின்றனர். பின்னணியில் அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிட் ஆகி இருந்த மன்சில் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரிம் ஜிம் கிரே' என்ற பாடல் ஒளிபரப்பாகிறது. அந்த பாடலில் அமிதாப்பச்சன் மற்றும் மவுசினி சட்டர்ஜி ஆகியோர் கடற்கரையையொட்டி மழையில் நனைந்தப்படி ஆடிப்பாடுவது போன்று காட்சிகள் இருக்கும். இந்த பாடலை கிஷோர் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோர் பாடியிருந்தனர். பாடலில் இடம்பெற்ற காட்சிகளை போலவே இந்த தம்பதியினரும் மழையில் நனைந்து ஆடுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவை பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு பயனர்கள் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். வயதானாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும் என உணர்த்துவதாக பலரும் பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News