இந்தியா

சுற்றுலா செல்லும் உற்சாகத்தில் மாணவர்கள் பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்த பஸ்

Published On 2022-07-05 15:38 IST   |   Update On 2022-07-05 15:38:00 IST
  • மாணவர்கள் பட்டாசு வெடிப்பதும், இதில் பஸ் தீப்பிடித்து எரிவதையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது மாநில மோட்டார் வாகன அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.
  • அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீப்பிடித்த பஸ்சை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பஸ்சை துரத்தி சென்ற அதிகாரிகள் பஸ்சை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா புறப்பட்டனர்.

இதற்காக 2 சுற்றுலா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்து 2 பஸ்களும் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்தனர்.

இதில் பட்டாசு வெடித்து சிதறியதில் பஸ்சின் மேல் பகுதி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த பஸ் ஊழியர்கள் அவசர, அவசரமாக அதனை அணைத்தனர்.

பின்னர் அவர்கள் மாணவர்களை ஏற்றி கொண்டு சுற்றுலா புறப்பட்டனர்.

இதற்கிடையே மாணவர்கள் பட்டாசு வெடிப்பதும், இதில் பஸ் தீப்பிடித்து எரிவதையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது மாநில மோட்டார் வாகன அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீப்பிடித்த பஸ்சை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பஸ்சை துரத்தி சென்ற அதிகாரிகள் பஸ்சை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News