சிறுவர்களை வீட்டில் சிறைபிடித்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
- பள்ளி படிக்கும் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
- மசாஜ் செய்வதாக கூறி இளைஞர்கள் பலரை இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு உட்படுத்தி வந்தது தெரிய வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஏனமக்கல் பகுதியை சேர்ந்தவர் அனில்(வயது52). இவர் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு பயிற்சி முகாம் நடத்தி வந்திருக்கிறார். மேலும் தனது வீட்டில் சிறுவர்களுக்கு பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இவர் தனது வீடு வழியாக சென்ற ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பள்ளி படிக்கும் அந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற பொதுமக்கள், அனிலை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பயிற்சி என்ற பெயரில் ஏராளமான சிறுவர்களை தனது வீட்டில் சிறைபிடித்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் மசாஜ் செய்வதாக கூறி இளைஞர்கள் பலரை இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு உட்படுத்தி வந்ததும் தெரிந்தது. அனில் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மட்டுமே புகார் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அனில், சிறையில் அடைக்கப்பட்டார்.