இந்தியா
ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி
- விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
- விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்:
மத்தியபிரதேச மாநிலம் கில்சிபூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று விட்டு 10 பேர் கொண்ட குழுவினர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2.40 மணியளவில் அந்த வேன் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இதில் 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.