என் மலர்
நீங்கள் தேடியது "ராஜஸ்தான் விபத்து"
- விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
- விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்:
மத்தியபிரதேச மாநிலம் கில்சிபூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று விட்டு 10 பேர் கொண்ட குழுவினர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2.40 மணியளவில் அந்த வேன் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இதில் 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
- 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரத்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அலிகாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து ஒன்று புறப்பட்டது. இப்பேருந்தானது உத்தரபிரதேச மாநில அரசு பேருந்தாகும். ஹலைனா மஹுவா நெடுஞ்சாலையில் பேருந்து சென்ற போது முன்னால் சென்ற டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரத்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினர் வந்தவுடன் பிரேதப் பரிசோதனை நடைபெறும் என்றும் கூறினர்.
- ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர்.
- சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று பார்மீர் மாவட்டத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்கச் சென்றனர். குடும்பத்தினர் அனைவரும் காரில் பயணம் செய்தனர்.
பார்மர் மாவட்டத்தின் குடா மலானி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் சாலையின் எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.






