இந்தியா

மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-07-23 10:18 IST   |   Update On 2024-07-23 15:41:00 IST
2024-07-23 05:41 GMT

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் மேம்பாட்டை குறிக்கோளாக கொண்டு பட்ஜெட் தயாரித்துள்ளோம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:39 GMT

இந்தியாவின் விலைவாசி உயர்வு தொடர்ந்து நான்கு சதவீதம் என்ற இலக்கு வரம்பிற்குள் உள்ளது- நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:38 GMT

சர்வதேச அளவில் பொருளாதாரம் நிலையாக இல்லை என்றாலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது- நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:38 GMT

இந்திய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வளர்ச்சி அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார்- நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:37 GMT

மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி- நிர்மலா சீதாராமன் பேச்சு

2024-07-23 05:37 GMT

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது மக்கள் மீண்டும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்- நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:34 GMT

நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

2024-07-23 05:34 GMT

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பாராளுமன்றம் கூடியது.

2024-07-23 05:13 GMT

இந்த ஆண்டு, வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

2024-07-23 05:10 GMT

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.




Tags:    

Similar News