என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
    • 2024- 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.

    அதன்படி 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    Live Updates

    • 23 July 2024 12:39 PM IST

      பட்ஜெட் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது...

    • 23 July 2024 12:38 PM IST

      சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிளாஸ்டிக் மீதான சுங்கவரி 25 சதவீமாக அதிகரிப்பு.

    • 23 July 2024 12:37 PM IST

      இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5சதவீதமாக குறைப்பு

    • 23 July 2024 12:34 PM IST

      ரூ.10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதமும், ரூ..12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், 15 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

    • 23 July 2024 12:31 PM IST

      ஆண்டுக்கு ரூ.3 முதல் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது.

    • 23 July 2024 12:28 PM IST

      தனிநபர் புதிய வருமான வரி முறையில் மாற்றம்... 3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது

    • 23 July 2024 12:27 PM IST

      மாத ஊதியம் பெறுவோருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ரூ.50,000-ல் இருந்து ரூ.75ஆயிரமாக உயர்வு

    • 23 July 2024 12:25 PM IST

      இணையவர்த்தகத்திற்கான TDS வரி 11 சதவீதமாக குறைப்பு

    • 23 July 2024 12:25 PM IST

      நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • 23 July 2024 12:24 PM IST

      ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைக்கப்படுகிறது- பட்ஜெட்டில் அறிவிப்பு

    Next Story
    ×