மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்
மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,400 புள்ளிகளில் வர்த்தம் ஆகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 50 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,450 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
மத்திய அரசின் பட்ஜெட் உடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட்டையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டினார்.
2024-25 பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து ஒப்புதலை பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.