இந்தியா

மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-07-23 10:18 IST   |   Update On 2024-07-23 15:41:00 IST
2024-07-23 06:53 GMT

வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைப்பு- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:52 GMT

தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:51 GMT

தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:50 GMT

அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும்- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:46 GMT

மூன்றில் இரண்டு பங்கு மக்கள் புதிய தனிநபர் வருமான வரிமுறை அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:43 GMT

20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:43 GMT

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைப்பு. பிளாட்டின் மீதான சுங்கவரி 6.4 சவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு

2024-07-23 06:42 GMT

மொபைல் போன்கள், அது தொடர்பான சாதனங்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

2024-07-23 06:41 GMT

புற்றுநோய்க்கான 3 முக்கிய மருத்துகளுக்கு சுங்கவரியில் இருந்து முழு விலக்கு- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:41 GMT

பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

Tags:    

Similar News