மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்
ஜிஎஸ்டி வரி முறை மேலும் எளிதாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்
நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபி-யில் 4.09 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதியாண்டில் கடன்களை தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்ப்பு...
வெளிநாடுகளில் இந்திய ரூபாய் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை- நிர்மலா சீதாராமன்
அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், விதிகள் எளிமையாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா கொண்டு வரப்படும்.
காசி விஸ்வநாதர் கோவில் மேம்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு