இந்தியா

ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு- பெங்களூர் மாணவர் ஆர்.கே. ஷிசிர் முதலிடம்

Published On 2022-09-11 09:06 GMT   |   Update On 2022-09-11 09:06 GMT
  • நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
  • மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார்.

ஜே.இ.இ. முதல்நிலை மற்றும் ஜே.இ.இ. முதன்மை (அட்வான்ஸ்) தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

மேலும் இந்த தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்வை எழுதும் தகுதியை பெறுவர்.

முதன்மை தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்- தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

இந்தநிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 6 ஆயிரத்து 516 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார். அவர் 360 மதிப்பெண்ணுக்கு 314 மார்க் பெற்றார்.

Tags:    

Similar News