இந்தியா

தெலுங்கானாவில் கட்டப்பட்டு வரும் 3டி கோவிலின் முகப்பு தோற்றம்.

நவீன தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் உதவியுடன் கட்டப்படும் உலகிலேயே முதல் 3டி கோவில்

Published On 2023-06-02 09:50 GMT   |   Update On 2023-06-02 09:50 GMT
  • அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோபோக்கள் உதவியுடன் கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
  • உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டை மண்டலம், புருகுபள்ளி டவுன்ஷிப் வளாகத்தில் 3,800 சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 3டி பிரிண்டிங் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கோவில் வளாகத்தில் 30 அடி உயரத்தில் விநாயகர், சிவன், பார்வதிக்கு 3 பகுதிகளாக மிகப்பெரிய அளவில் தனித்தனியாக சன்னதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஐதராபாத்தை சேர்ந்த அப்சுஜா இன்ப்ராடெக் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிம்ப்ளி போர்ஸ் கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோபோக்கள் உதவியுடன் கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது விநாயகர், சிவன் கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் பார்வதி தேவி கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது உலகிலேயே முதல் மிகப்பெரிய அளவில் 3டி கோவில் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News