இந்தியா
null

மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

Published On 2024-02-10 11:41 IST   |   Update On 2024-02-10 12:09:00 IST
  • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியதும், டிஆர். பாலு கோரிக்கை ஒன்றை வைத்தார்.
  • சபாநாயகர் மிக வரலாற்று சிறப்புமிக்க விவகாரம் குறித்து விவாதம் நடைபெற உள்ளது என்றார்.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதார நிலை, பிரதமர் மோடி பதவி ஏற்றபின் இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியதும், டிஆர். பாலு கோரிக்கை ஒன்றை வைத்தார் அதில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து விவாதம் நடத்துமாறு கூறினார்.


அதற்கு சபாநாயகர் மிக வரலாற்று சிறப்புமிக்க விவகாரம் குறித்து விவாதம் நடைபெற உள்ளது என்றார்.

அதேபோல் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டு மீனவர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டி மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்து கொண்டே திடீரென மக்களவையில் 'காப்பாற்று, காப்பாற்று' என்ற படி தி.மு.க. எம்.பி.க்கள் தமிழில் முழக்கமிட்டனர்.

அதேபோல் 'தமிழக மீனவர்களை காப்பாற்று' எனவும் முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News